தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது பேசிய அவர், “நாட்டின் கொடுமையைப் பாருங்கள்.. யாராவது இறந்துவிட்டால் அவர்கள் ஏன் இறந்தார்கள், எதற்காக இறந்தார்கள் என்று கூடத் தெரியாமல், அவர்களைத் தனது வீட்டிற்கு (பனையூர்) வரவழைத்து அனுதாபம் சொல்கிறார்கள்” என்று சாடியுள்ளார்.

​யாரையும் நேரில் சென்று சந்திக்காமல், பாதிக்கப்பட்டவர்களைத் தனது இடத்திற்கு வரவழைக்கும் விஜய்யின் அணுகுமுறையை ‘போலி அரசியல்’ என்பது போல எடப்பாடியார் விமர்சித்துள்ளது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மக்கள் பக்கம் நிற்காமல், வீட்டுக்கு வரச் சொல்வது என்ன நியாயம்?” என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, வரும் நாட்களில் அதிமுக – தவெக இடையிலான மோதலை இன்னும் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.