ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதியாண்டு கணக்குகள் முடிக்கும் பணிகள் நடந்து வருவதால் மக்களுக்கு சேவை கிடையாது. அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று பிற்பகல் 3.30 மணி வரை SBI மொபைல், ஆன்லைன் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவைகள் என அனைத்து வகை சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.