மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம்  அறிவித்தது.

முன்னதாக ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிர, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வரும் நிலையில், `ஹிட் அண்ட் ரன்’ சட்டப்பிரிவு மட்டும் அமல்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.