இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இன்று மே ஐந்தாம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களையும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளையும் கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.