கொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர்.

அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள்  போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் குறிப்பாக புற நோயாளிகள் சேவை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6 மணியுடன் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் இதன் காரணமாக இன்று வழக்கம் போல் மருத்துவம் சேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.