நாடு முழுவதும் 30 அரசு மற்றும் 20 தனியார் என்று மொத்தம் 50 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டு முதலே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிதாக 8,195 இடங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 1,07,658 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்திலும் புதிதாக மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் சென்னை ஸ்டாலின், திருச்சி மற்றும் தர்மபுரி ஆகிய மூன்று அரசு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதற்கான அங்கீகாரம் ரத்து ஆகாது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது