தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு  அறிவித்துள்ளது.

இப்புதிய அறிவிப்பு மூலம் மக்கள் இனி தங்க நகை வாங்க கடைகளுக்கு செல்லும் போது BIS ஹால்மார்க் முத்திரை மட்டும் அல்லாமல் 6 இலக்க HUID இருக்கா என்பதை உறுதி செய்துக்கொண்டு வாங்க வேண்டும். தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்ய தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4 இலக்க HUID எண்ணை 6 இலக்காக மாற்றி கட்டாயமாக்கியுள்ளது.