உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்புச்சுவர் மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்காக அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரும்பு விபத்து தடுப்புச் சுவருக்கு மாற்றாக மூங்கில் விபத்து தடுப்பு சுவர் தயாரிக்கப்பட்டு மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிராவில் உள்ள சந்திராபூர்-யவத்மால் நெடுஞ்சாலையில், 200 மீட்டருக்கு மூங்கிலால் ஆன விபத்து தடுப்பு நிறுவப்பட்டுள்ளது. “நாட்டின் மூங்கில் துறைக்கு இது மிகப்பெரிய சாதனை. உலகிலேயே முதன்முறையாக நெடுஞ்சாலையில் மூங்கில் தடுப்புகளை அமைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.