
நாடு முழுவதும் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரங்கள் ஆபத்தில் உள்ளதாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் நாட்டில் உள்ள 30 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உறுதிப்படுத்த சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு உட்பட தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த தரநிலை, விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதாக கடந்த 2 மாதங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் ஒரு மாதமாக கல்லூரிகளுக்குச் சென்று குறைபாடுகளைக் கண்டறிந்து வருகிறது. குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் சரிசெய்யாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.