இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கவேண்டும். தற்போது மே மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 2023-க்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

ஜூன்(2023) வங்கி விடுமுறை நாட்கள்

# ஜூன் 4- ஞாயிற்றுக்கிழமை

# ஜூன் 10- 2வது சனிக்கிழமை.

# ஜூன் 11- ஞாயிற்றுக்கிழமை.

# ஜூன் 15- ராஜ சங்கராந்தியையொட்டி மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும்.

# ஜூன் 18- ஞாயிற்றுக்கிழமை.

# ஜூன் 20-ரத யாத்திரை ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும்.

# ஜூன் 24- 4-வது சனிக்கிழமை

# ஜூன் 25- ஞாயிற்றுக்கிழமை

# ஜூன் 26- கர்ச்சி பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகளானது மூடப்படும்.

# ஜூன் 28- ஈத் உல் அஸ்ஹாவை முன்னிட்டு கேரளா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர் போன்ற பகுதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

# ஜூன் 29-ஈத் உல் அஷாவையொட்டி பிற மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

# ஜூன் 30- ரீமா ஈத் உல் அழாவையொட்டி மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்ட நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இதில் குறிப்பிட்ட மாநிலங்கள் (அ) பிராந்தியங்களில் கடைபிடிக்கப்படும் பிற விடுமுறைகள் சற்று வேறுபட்டிருக்கலாம்.