லோக் சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தியுடன்  நெருக்கமாக பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி தனது சகோதரியின் கன்னத்தை தழுவும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்து, இதுபோன்ற நடத்தை பாராளுமன்ற மரியாதைக்கு எதிரானதாகக் கூறியுள்ளது. பாஜக தகவல் பிரிவு தலைவர் அமித் மல்வியா, “இது திகிலூட்டும் செயல். லோக் சபா தலைவர் ராகுல் காந்திக்கு பாராளுமன்ற ஒழுங்கு பற்றி நினைவூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது ஏமாற்றமாகும்,” என X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த விவகாரத்தில் லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் தலையிட்டுள்ளார். அவர், “பாராளுமன்றத்தின் மரியாதையை காத்திடுவது ஒவ்வொரு உறுப்பினரின் கடமை,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப உறவுகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கக் கூடாது என்றும், கடந்த காலங்களில் சில எம்பிக்கள் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.