
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் லாப நோக்கத்திற்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வது மட்டும் தமிழக அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கேள்வி எழுப்பியிருந்தார்., இது தொடர்பாக தன்னுடைய ஜனசேனா கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவில் பேசிய அவர் தமிழ்நாடு அரசியல்வாதிகள் தங்களுடைய திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறியிருந்தார் .
இந்த நிலையில் பவன் கல்யானின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தன்னுடைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுடைய மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பது அந்த மொழியை வெறுப்பதாக அல்ல. அது எங்களுடைய தாய் மொழியையும், நம் பாரம்பரியத்தையும் பெருமையோடு காக்க விரும்புவதற்காகவே. இதை யாராவது பவன் கல்யாண் இடம் சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.