உத்தரபிரதேசம் மாநிலம் நாகூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவிகள் லட்டு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சகோதரிகளான இரண்டு மாணவிகள் சுதந்திர தினத்தன்று லட்டு திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி முதல்வரால் அடித்து வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து மாணவிகள் குடும்பத்தினரிடம் தெரிவிக்க மாணவிகளின் தந்தை ஜஸ்பீர் குமார் பள்ளிக்கு சென்று என்ன நடந்தது என கேட்டுள்ளார். அப்போது அவரிடமும் பள்ளி முதல்வர் கடுமையாக நடந்துள்ளார். இது குறித்து ஜஸ்பீர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது ஒரு மாணவி தங்களுக்கும் இந்த திருட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீணாக எங்கள் மீது பழியை சுமத்த பார்க்கிறார்கள். மற்ற சில மாணவிகள் தான் இதற்கு காரணம் என்று தங்கள் தரப்பு நியாயத்தை கூறியுள்ளனர். ஜஸ்பீர் குமாரும் தனது மகள்களின் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.