குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்னால், நடுராத்திரியிலே சிங்கம் ஒன்று காவலராக நிற்பது போன்று பதிவாகியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வனத்துறை  அதிகாரி பிரவீன் காஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 27 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், கோவில் நுழைவாயிலின் முன் சிங்கம் ஒன்று அமைதியாக நின்று, கண்காணிப்பது போல் காட்சி அளிக்கிறது.

இதனை பகிர்ந்த பிரவீன் காஸ்வான், “என்ன ஒரு தெய்வீகக் காட்சி. சிங்கம் கோவிலுக்கு காவல் வகிக்கிறது போல தோன்றுகிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது நவராத்திரி பண்டிகை காலத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுபோன்ற காட்சிகள் வனவிலங்குகளுக்கும், அந்த பகுதியின் மதபரம்பரையுடன் கூடிய கலாச்சார உறவுக்கும் ஒரு பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது என சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அதே நேரத்தில், சிலர் இந்த வீடியோ உண்மையா அல்லது ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதா? என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, சிலர் இதைப் பற்றிய  தகவல்களை வனத்துறை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.