நாடு முழுவதும் பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 15 வது தவணை 2000 ரூபாய் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 15ஆம் தேதி பதினாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றால் ekyc முடிதிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.