உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபையில் சிறப்பு தொடர் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் சட்டம் வரையறை செய்யப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் இந்த மசோதாவில் பல சிறப்பம்சங்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை மற்றும் பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். விவாகரத்து, திருமணம் மற்றும் சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம்பெறவுள்ளது. அதேசமயம் சமீப காலமாக இருதாரத் திருமணம் மற்றும் பலதார திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டாவது திருமணம் மற்றும் லிவிங் வாழ்க்கை முறையை பதிவு செய்யும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.