நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை பட்டியல் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை நாட்களுக்கு ஏற்றவாறு வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும். இருந்தாலும் இரண்டாவது மட்டும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானது. தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  • 2 நவம்பர் 2023 – ஷில்லாங்
  • 7 நவம்பர் 2023 – ஐஸ்வால்
  • 10 நவம்பர் 2023 – ஷில்லாங்
  • 13 நவம்பர் 2023 – அகர்தலா, டேராடூன், காங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், கான்பூர் & லக்னோ
  • 14 நவம்பர் 2023 – அஹமதாபாத், பேலாபூர், பெங்களூரு, காங்டாக், மும்பை, நாக்பூர்
  • 15 நவம்பர் 2023 – காங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ
  • 17 நவம்பர் 2023 – போபால்
  • 20 நவம்பர் 2023 – பாட்னா மற்றும் ராஞ்சி
  • 23 நவம்பர் 2023 – டேராடூன் மற்றும் ஷில்லாங்
  • 27 நவம்பர் 2023 – அகமதாபாத், பெங்களூரு, காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் (ஏபி), இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, ஷில்லாங் & திருவனந்தபுரம் தவிர அனைத்தும்
  • 30 நவம்பர் 2023 – பெங்களூரு