கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம்  லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார்.  அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை வைத்து அடைத்துள்ளார் அந்த போதை ஆசாமி.

அப்போது துணியை கழற்றிவிட்டு அந்த பெண் அலறியதும் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து போதை ஆசாமியை பிடித்து வைத்து அவரை நிர்வாணமாக்கி தூணில் கட்டி வைத்து உதைத்துள்ளார்கள். பின்னர் அவருடைய தலை முடியை வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல் துறை இளைஞர் மீட்டு சிறையில் அடைத்துள்ளது.