சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது தெரியவந்தது. அந்தக் கட்டைப்பையில் குழந்தையை துணியால் சுற்றி பால் பாட்டிலுடன் அங்கு விட்டு சென்றுள்ளனர்.

பதறிப் போனா அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் அவர்கள் குழந்தையை மீட்டனர். இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் பால மந்திர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் குழந்தை பிறந்து 3 மாதமே ஆகும் மனசாட்சியே இல்லாமல் இப்படி விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.