தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘போர்த் தொழில்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் செப்டம்பர் 13 ஆம் தேதி இன்று நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.