தமிழகத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இடங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின் கருத்துருவான நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் சமூகங்களை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37 ஆவது இனமாக சேர்த்து ஒன்றிய அரசு அரசு இதழ் வெளியிட்டது.

அதற்கு ஏற்ப தமிழக அரசும் மேற்காணும் சமூகத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியுடைய ஏதுவாக அரசாணை எண் 38 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட குறிப்பில், வரும் கல்வியாண்டிலேயே நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற ஏதுவாக ST சான்றிதழ்களைப் பெற்று பயனடைய G.O வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.