விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெறும் கனவோடு களமிறங்கிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார்.
நெல்லை தொகுதியில் இருந்து சாத்தூருக்கு மாறிய அவருக்கு, சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் இசக்கிராஜா மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டார்.
திமுக வேட்பாளர் கடற்கரை ராஜிடம் வெறும் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் தோல்வியடைந்த நிலையில், சசிகலாவின் வேட்பாளர் இசக்கிராஜா பிரித்த 11,371 வாக்குகள் தான் பாஜகவின் வெற்றியைத் தடுத்து ‘உலை’ வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
குறிப்பாக, நயினார் நாகேந்திரன் நம்பியிருந்த சமூக வாக்குகளை இசக்கிராஜா கணிசமாகப் பிரித்ததால், கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பு திமுக பக்கம் சாய்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் 4 இடங்களை வென்றிருந்த பாஜக, இந்த முறை தமிழகம் முழுவதும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
