கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், வடசேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் என்கிற பத்ரோஸ் ஜான் (64). இவர், தனது பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 94 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, அந்த மூதாட்டியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, முதியவருடன் போராடியுள்ளார்.

ஆரம்பத்தில் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் மூதாட்டி அந்தத் துணியை உருவி எடுத்து, காப்பாற்றுமாறு கத்தி அலறத் தொடங்கினார். இதனால் பயந்துபோன முதியவர் ஜோஸ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரிடம் அவர் நடந்த விவரத்தைக் கூறினார். இதனையடுத்து, பெருநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், தப்பியோடிய முதியவர் ஜோஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.