சமூக வலைத்தளங்களில் ஒரு வியக்க வைக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் கோழி முட்டையிலிருந்து வீட்டிலேயே ஒரு கோழிக்குஞ்சை பொரித்து எடுத்திருக்கிறார். இதைப் பார்த்த இணையவாசிகள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து, அந்த நபரைப் ‘கடவுள்’ என்று புகழ்ந்து வருகின்றனர். இந்த 1 நிமிட வீடியோவில், அந்த நபர் ஒரு கருவியைப் பயன்படுத்தி முட்டையின் மேல்பகுதியை மெதுவாகத் திறக்கிறார். பிறகு, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதோ ஒரு ரகசிய திரவத்தை முட்டைக்குள் செலுத்துவதைக் காட்டுகிறார்கள்.
This chicken is sloppy when incubating and the other chicken warns it pic.twitter.com/cIYHOmwXrI
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) October 30, 2025
“>
This guy grew a chicken in an open egg 😳
pic.twitter.com/UDEJuRF1Mx— Cats & Dogs Universe (@CatsandDogsmem) October 30, 2025
“>
காலப்போக்கில், முட்டைக்குள் இருக்கும் கரு மெதுவாக வளர்ச்சியடைவதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது ஏதோ ஒரு அறிவியல் திரைப்படத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது.கடைசியில், அந்த நபர் இயற்கையான முறையில் நடப்பது போலவே, முட்டையிலிருந்து ஒரு சிறிய கோழிக்குஞ்சை வெற்றிகரமாக வெளியே கொண்டு வருகிறார்.
இந்த வீடியோ ரெடிட்டில் வெளியான உடனேயே பலரின் கவனத்தை ஈர்த்து, பல கேள்விகளையும் கருத்துக்களையும் எழுப்பியுள்ளது, குறிப்பாக அவர் பயன்படுத்திய அந்த மர்மத் திரவம் குறித்து பலர் விவாதிக்கிறார்கள்.
ஒரு பயனர், இது 2016 ஆம் ஆண்டு ஒரு ஜப்பானிய மருத்துவ மாணவர் செய்த பரிசோதனை என்று கூறியுள்ளார். இந்தச் செயல் ‘அசாத்தியமானது’ என்றும், இவர் வீட்டிலேயே கோழிக்குஞ்சை உண்டாக்கி, ‘கடவுளாக’ மாறிவிட்டார் என்றும் மக்கள் வியக்கின்றனர்.
