திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ பிரச்சாரத்தில், தொண்டர் ஒருவர் வழங்கிய இளநீரை அவர் முகம் சுளிக்காமல் வாங்கிப் பருகிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொளுத்தும் வெயிலில் திறந்த வேனில் நின்றபடி மக்களிடம் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்த விஜய்க்கு, கூட்ட நெரிசலுக்கு நடுவே ஒரு அன்புத் தொண்டர் இளநீரை நீட்டினார்.

எவ்வித பாதுகாப்பு அச்சமும் இன்றி, தன் தொண்டன் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் அந்த இளநீரை வாங்கிப் பருகிய விஜய்யின் செயல், அங்கிருந்தவர்களைக் நெகிழச் செய்தது.

“>

 

“தலைவன் – தொண்டன் இடையேயான பாசப் பிணைப்பு இதுதான்” என தவெக நிர்வாகிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வர, “தளபதிக்கு இளநீர் கொடுத்த அந்த நபர் யார்?” என்ற தேடலும் ஒருபுறம் தீவிரமாகியுள்ளது.