
தர்மபுரியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயசுதா. 19 வயதான இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மத்தூர் அருகே உள்ள தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இவர் தன்னுடைய கல்லூரி நண்பர் கௌதம் என்பவர் மற்றும் சக நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளார் .
அப்பொழுது கிருஷ்ணகிரி மத்தூர் ஏரிக்கரை அருகே நண்பர்கள் ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசுதா தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.