உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சனோலி பகுதியில் சனிக்கிழமை மாலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. யமுனாநகரில் உள்ள கல்லூரியில் பி.எம்.எஸ். படித்து வந்த மாணவர் ஹிமான்ஷு, மாலை 5 மணியளவில் பழுதடைந்த பாலத்திற்கு வந்து, அங்கிருந்த இரு குழந்தைகளிடம் தனது மொபைல் மற்றும் லேப்டாப்பை கொடுத்துவிட்டு, உடைந்த கம்பியைப் பிடித்து பாலத்தில் தொங்கி, பின்னர் நதியில் குதித்தார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர், ஆனால் முடியவில்லை.
குதிப்பதற்கு சற்று முன்பு, ஹிமான்ஷு தனது நண்பருக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார், அதில் “நான் பிரச்சனையில் இருக்கிறேன்…” என்று எழுதியிருந்தார். இது அவர் ஏதோ ஆழமான மன உளைச்சலில் இருந்ததை உணர்த்தியுள்ளது. ஆனால் அவர் பிரச்சனையை வெளிப்படையாகக் கூறவில்லை. ஹிமான்ஷுவின் தந்தை ஜெயபகவான், சமால்கா பகுதியைச் சேர்ந்த அரசு ஆசிரியர். அவரது மூத்த மகன் வெளிநாட்டில் படிக்கிறார், ஆனால் ஹிமான்ஷு இங்கு பி.எம்.எஸ். படித்து வந்தார். சனிக்கிழமை மாலை அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையுடன் இருந்தனர். ஆனால், ஹிமான்ஷு நதியில் குதித்த வீடியோ வெளியானதும், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
दोस्त को लोकेशन भेजी, खेल रहे बच्चों को मोबाइल सौंपा और नदी में लगाई छलांग… कॉलेज स्टूडेंट का वीडियो वायरल !!
यूपी शामली के में हरियाणा यमुनानगर के बीएमएस छात्र हिमांशु ने यमुना नदी में छलांग लगाकर आत्महत्या कर ली! पुल पर बच्चों को मोबाइल और लैपटॉप सौंपने के बाद, उसने यह कदम… pic.twitter.com/jiaxBVRwIz
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) September 7, 2025
சம்பவம் தெரிந்ததும், கைரானா காவல்துறை உடனடியாக பாலத்திற்கு விரைந்து, மோட்டார் படகு மூலம் நதியில் தேடுதல் பணியைத் தொடங்கியது. ஆனால், மாலை வரை ஹிமான்ஷுவை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறை இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது. சுமார் இரண்டு நிமிடங்கள் 21 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ, ஹிமான்ஷு பாலத்தில் தொங்கி குதிப்பதை தெளிவாகக் காட்டுகிறது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
