சமீப காலமாகவே ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல்வேறு வதந்தியான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நட்சத்திர குறியீட்டுடன் கூடிய 500 ரூபாய் நோட்டு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நட்சத்திர குறியீடு பொறிக்கப்பட்ட நோட்டுகளின் செல்லுபடி ஆகும் தன்மை குறித்து தெரிவித்துள்ளது.

அதில் தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளுக்கு பதிலாக அச்சிடப்பட்ட நோட்டுக்களில் நட்சத்திரக் குறியீடு பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை நோட்டுகளில் வரிசை எண்களுக்கு பதிலாக ஒரு நட்சத்திர குறியீடு இருக்கும். நோட்டுக்கட்டுகளில் தவறாக அச்சிடப்பட்ட சில நோட்டுகளுக்கு பதிலாக இந்த நட்சத்திர குறியீடு கொண்ட நோட்டுகள் மாற்றப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செல்லுபடியாகும் மற்ற நோட்டுகளை போலவே நட்சத்திர குறியீடு கொண்ட இந்த ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது