ஆந்திராவில் ஷேக் ரக்ஷித் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஆவார். இவர் ஒரு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி. இவர்கள் இருவருக்கும் கடந்த தேர்தலின் போது தகராறு ஏற்பட்டது. இதனால் தேர்தலின் போது ஷேக் ரக்ஷித் அவருடைய நண்பரின் வீட்டின் முன்பாக நின்ற பைக்கை தீ வைத்து எரித்தார். இதனால் ஷேக் ஜிலானி மிகுந்த கோபத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரக்ஷித் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தார். அப்போது அங்கு வந்த ஜிலானி தான் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவருடைய ஒரு கைதுண்டானது. அப்போது சுற்றி நின்று இந்த சம்பவத்தை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் கூட தடுக்க முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து ஜிலானி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் அருகில் இருந்தவர்கள் ரக்ஷித்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு ரக்ஷித்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜிலானியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை சரமரியாக விமர்சித்து வருகிறது.