
பிரபல நடிகரான விக்கி கவுசலின் நடிப்பில் சமீபத்தில் சாவா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் மராத்தியர்கள் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கப் புதையலை முகலாயர்கள் மத்திய பிரதேசத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிகார் கோட்டையில் வைத்ததாக காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் அந்த கோட்டையில் தங்க நாணயங்கள் உள்ளிட்ட புதையல்கள் இருப்பதாக வதந்தி பரவியது. இதனை நம்பிய அந்த பகுதி மக்கள் கோட்டையை சுற்றி இருக்கும் நிலப்பரப்பில் குழிகள் தோண்டி தங்க நாணயங்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அறிந்த புர்ஹான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங் குழிகள் தொண்டுவதை தடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த பகுதியில் தங்க நாணயங்கள் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் தொல்லியல் சிறப்பு மிக்கவையாக இருக்கக்கூடும். எனவே அது அரசுக்கு தான் சொந்தம் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதற்கிடையே செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கோட்டையை சுற்றி மக்கள் குழி தோண்டி தங்க நாணயங்களை தேடும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.