ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் எண்ணெய் கப்பல்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கப் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன.

இது குறிப்பாக, சமீபத்தில் இரண்டு பெரிய எண்ணெய் டாங்கர் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் ‘டிராக்கர்’கருவிகளை அணைத்து வைத்துவிட்டு, ஈரானின் பிடியில் சிக்காமல் அந்தப் பகுதியைக் கடந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் வகையில் ஈரான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பயந்து வருகின்றன.

இந்த ஹார்முஸ் நீரிணைப் பகுதி உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாகும். இப்பகுதியில் ஈரானின் கடல்சார் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

இருப்பினும், பிடிபடுவதைத் தவிர்க்கக் கப்பல்கள் தங்கள் தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கிவிட்டு பயணிப்பது, கடல்சார் பாதுகாப்பில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலில், ஒருபுறம் பொருளாதாரத் தடைகள் மற்றும் மறுபுறம் நேரடித் தாக்குதல் அபாயங்களுக்கு இடையே, உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.