பிரபல நடிகை ஷகிலா தனது 16 வயது முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பால் பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். சில சீரியல்களும் அடக்கம்.

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நடிகை ஷகிலா இறந்துவிட்டதாக இணையத்தில் செய்தி பரவி வந்தது. இந்த செய்தி திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை பார்த்த நடிகை ஷகிலா பொய்யான செய்தி பரப்பியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.