லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு நயன்தாரா முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் சசிகாந்த் இயக்கத்தில் சித்தார்த், மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் திரைப்படத்தை நடித்து இருக்கிறார். இந்த படம் தன்னை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பி உள்ளார். மேலும் யோகி பாபுவோடு மண்ணாகட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது நயன்தாராவுக்கு ரூ.200 கோடி சொத்துகள் உள்ளன. மனசின்னகரே என்ற மலையாள படம் மூலம் 2003ல் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் ஐயா படம் மூலம் 2005இல் களம் கண்டார். இதுவரை 75 படங்கள் நடித்துள்ள நயன்தாரா, டாடா ஸ்கையின் 50 வினாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கினார். இதேபோல் படம் ஒன்றுக்கு ரூ.10 கோடி சம்பளமாகப் பெறுகிறார். அவருக்கு ரூ. 200 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.