லவ் டுடே திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவ-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல கோடிகள் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. மேலும் இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் ஹீரோயின் யார் என தகவல் வெளியாகவில்லை. தயாரிப்பாளர் பொருத்தவரை போனி கபூர் இந்தி திரைப்படங்கள் என மொழி படங்களை தயாரித்துள்ளார். இதனால் இத்திரைப்படத்தை அவர் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.