
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரானார் மன்சூர் அலிகான்.
நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். நான் ஜாலியாக பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார் என போலிஸ் விசாரணையில் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பின் நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், வீடியோவில் பேசியது நான்தான், நான் ஜாலியாக பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார். எந்த உள்நோக்கத்துடனும் திரிஷாவை குறித்து பேசவில்லை. என் பேச்சால் திரிஷா வருத்தமடைந்திருந்தால் அதற்காக நானும் வருந்துகிறேன். நடிகை திரிஷாவை மிகவும் மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் நடிகை திரிஷாவை பற்றி பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.