ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிலால் குஜ்ஜார் என்பவர் ஒரு யூ டியூபராக இருக்கிறார். இவர் தனது சேனல்களில் பொழுதுபோக்கிற்காக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு பிரபலமாவதற்காகவும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக ஒரு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பன்வாரிலால் குஜ்ஜார் தான் வெளியிட்டுள்ள பதிவில் சல்மான் கானை கொலை செய்வதாக எங்கேயும் கூறவில்லை என மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பன்வாரிலால் குஜ்ஜாரை ஜாமினில் விடுவித்துள்ளார்.