தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவர் நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார்.

அதோடு வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் சிங்கமுத்து ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சாய் ராஜகோபால் இயக்கியுள்ள நிலையில் இந்த மாதம் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.