பழம்பெரும் மறைந்த நடிகர் எம்.ஆர் ராதாவின் மனைவியும் நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 86. இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் கீதா ராதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகவேள் எம்.ஆர் ராதா மனைவி கீதா ராதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
