கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு கிராமத்தில் லட்சுமணா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாம்மா (42) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் உடல் நலக்குறைவினால் ஏற்கனவே இறந்துவிட்டார். இதில் ராதாம்மா ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிறகு லட்சுமணன் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன் மனைவியுடன் தகராறு செய்தார். அந்த வகையில் நேற்று முன் தினமும் குடிபோதையில் வந்த லட்சுமணா தன் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் அவர் தன் மனைவியை அடித்ததோடு சுவரில் தலையை முட்டினார். இதில் அவருடைய மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

பின்னர் லட்சுமணா தன்னுடைய மனைவி கீழே தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தார். அப்போது ஒருவர் போலீசாருக்கு தொடர்பு கொண்டு லட்சுமணா தன் மனைவியை கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்வதாக புகார் கொடுத்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாம்மா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லட்சுமணாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறும்போது தன்னுடைய மூத்த மகன் இறந்த பிறகு ராதாம்மாவும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி லட்சுமணா தகராறு செய்ததோடு தற்போது கொலை செய்துள்ளதாக கூறியுள்ளனர்.