
நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நலமுடன் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் கடந்த 11ஆம் தேதி நடந்த நிலையில் மே 16ஆம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.