விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் ரசிகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய் மக்கள் நலன் குறித்து பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் மீட்கப்படும். ஆவினில் கருப்பட்டி பால் வழங்கப்படும். அரசு ஊழியர்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும். காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். எம்எல்ஏ அமைச்சர்களுக்கு நடத்தை விதிகள் வகுக்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்பிற்கு தனித்துறை உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.