
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீவிக்கு எதிராகவும் தோஷகானா வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது அரசுக்கு கிடைத்த சங்கிலி, காதணி, இரண்டு மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை பூஷ்ரா பீவி வைத்துக் கொண்டதாகவும் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடத்து அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 12ஆம் தேதி வரை பூஷ்ரா பீவிக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.