இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், ஐடி கலாச்சாரம் ஒருபுறம் வளர்ந்து வந்தாலும், அதன் பின்னணியில் நடக்கும் சில வினோதமான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராகப் பணியாற்றும் பெண்ணுக்கும், தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், மனைவியின் மதுப்பழக்கம் தான் முதல் வில்லனாக நுழைந்துள்ளது. தினமும் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் பப் (Pub), கிளப் எனச் சுற்றிவிட்டு மது அருந்திவிட்டுத் தாமதமாக வீட்டிற்கு வருவதை அந்தப் பெண் வழக்கமாக வைத்துள்ளார்.
இதை கணவர் கண்டித்தபோது, “இது என் தனிப்பட்ட வாழ்க்கை, இதில் தலையிடக் கூடாது” என்று அந்தப் பெண் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தனது கடந்த கால உல்லாச வாழ்க்கையைப் பற்றி கணவரிடம் கூறி மன உளைச்சலை ஏற்படுத்திய அந்தப் பெண், ஒரு கட்டத்தில் எல்லையைத் தாண்டிக் கணவருக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து, தனது தோழிகளுடன் உல்லாசமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு கணவர் மறுத்தபோது, அவரைப் பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் இந்த விபரீத செயலால் அதிர்ந்து போன கணவர், அவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவு செய்து, தான் வாங்கிக் கொடுத்த நகைகளைத் திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால் நகைகளைத் தர மறுத்ததால், தற்போது பெங்களூரு அம்ருதஹள்ளி போலீசில் நீதிகேட்டுப் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் ஐடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
