ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவிய போதிலும், அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவின் செயல் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த சீசனின் கடைசி ‘ஹோம் மேட்ச்’ முடிந்த பிறகு இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.

ஆட்டம் முடிந்ததும், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் மற்றும் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ப்ரீத்தி ஜிந்தா தனது கைகளாலேயே பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சிகளை ரசிகர்களுக்கு வீசி வழங்கினார். தூரத்தில் இருந்த ரசிகர்களுக்கும் ஜெர்சி சென்றடையும் வகையில் ‘லாஞ்சர்’ கருவியைப் பயன்படுத்தி அவர் பரிசுகளை வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.

மைதானத்தில் இருந்த ரசிகர்களுடன் உரையாடியும், முத்தங்களை பறக்கவிட்டும் (Blowing kisses) ப்ரீத்தி ஜிந்தா காட்டிய ஆர்வம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, ஆட்டத்தின் போது பிரியான்ஷ் ஆர்யாவின் சிக்ஸர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் வீழ்ந்தபோது அவர் கொடுத்த ரியாக்‌ஷன்கள் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளன.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, பிரப்சிம்ரன் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அரைசதங்களால் 222 ரன்கள் குவித்தது. கடினமான இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடைசி ஓவரில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு இதுவே முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி அடைந்தாலும், ரசிகர்களைக் கௌரவித்த ப்ரீத்தி ஜிந்தாவின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.