ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி வெள்ளகோவில் சாமிநாதன் திமுகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றார். இப்படியான நிலையில் தோப்பு வெங்கடாசலத்தின் வருகை திமுகவிற்கு கூடுதல் பலமாக உள்ளது. ஆனால் உட்கட்சி ரீதியாக பணிப்போர் நிலவுவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படியான நிலையில் ஈரோட்டில் இன்றைய செய்தியாளர்களை அமைச்சர் முத்துசாமி சந்தித்து பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும் அவருடன் இருந்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்துக் கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த தோப்பு வெங்கடாசலம் அவர்களுடைய கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தார். தான் பேசிக் கொண்டிருக்கும்போது தோப்பு வெங்கடாசலம் குறிக்கிட்டு பதிலளிக்க முயற்சி செய்ததால் அதனைப் பார்த்து அமைச்சர் முத்துசாமி கோபமடைந்தார். உடனே அவர் தோப்பு வெங்கடாஜலத்திடம், இருங்க நான் சொல்லிக்கிறேன், எங்கிட்ட தான கேக்குறாங்க நானே பதில் சொல்லிக்கிறேன் நீங்க கொஞ்சம் பொறுங்க.

எதுக்கு குறுக்கீடு செய்கிறீங்க இருங்க தோப்பு நான் சொல்லிட்டு இருக்கிறேன் என்று அமைச்சர் முத்துசாமி கோபப்பட்டார். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சமீப காலமாகவே அமைச்சர் முத்துசாமிக்கும் தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே பணிப்போர் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுவெளியில் தோப்பு வெங்கடாசலத்திடம் அமைச்சர் முத்துசாமி இவ்வாறு கோபப்பட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.