தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்ரவரி 7ஆம் தேதி காலை, மாலையில் கணினி வழியாக தேர்வு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்