தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வின் கீழ், 1033 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கான நேரடி நியமனமாகும்.

முதலில் 615 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது கூடுதலாக 418 புதிய பணியிடங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 1033 பணியிடங்கள் உருவாகியுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  25.06.2025

1. உதவிப் பொறியாளர் (அமைப்பியல்) – 242 இடங்கள்
துறைகள்: குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்டவை.

தகுதி: B.E Civil Engineering

சம்பளம்: நிலை – 20

2. உதவிப் பொறியாளர் (மின்னியல்) – 391 இடங்கள்
மின்சார வாரியம் மற்றும் நகர வளர்ச்சி குழுமம்

தகுதி: B.E / B. Tech in Electrical & Electronics

சம்பளம்: ₹39,800 – ₹1,26,500 / நிலை 20

3. இளநிலை திட்ட அமைப்பாளர் – 30 இடங்கள்

தகுதி: B.E Civil / Town & Country Planning

சம்பளம்: நிலை – 20

4. உதவிப் பொறியாளர் (வேளாண்) – 116 இடங்கள்

தகுதி: B.E (Agri) / B.E (Mech) / B. Tech (Auto) உள்ளிட்ட துறைகள்

சம்பளம்: நிலை – 20

5. உதவிப் பெருந்தச்சன் – 38 இடங்கள்

துறைகள்: இந்துசமய அறநிலையத்துறை

தகுதி: B. Tech in Traditional Architecture / BFA

சம்பளம்: நிலை – 20

6. செயல் அலுவலர் – 5 இடங்கள்

தகுதி: இளங்கலை பட்டம்

சம்பளம்: நிலை – 20

விண்ணப்பதாரர்கள் பணியிடம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பினை பார்க்கலாம்.  www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். முழுமையான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு முறை பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்துதான் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.