தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு சாதகமான சில விளக்கங்களை கொடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் சி.வி கணேசன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கூறியதாவது, இந்த 12 மணி நேர வேலை மசோதா என்பது தொழிலாளர்களின் விருப்பத்தேர்வாக மட்டுமே இருக்கும். எந்த நிறுவனங்களும் தொழிலாளர்களை கட்டாயப்படுத்த கூடாது. வாரத்தில் 48;மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. அதே நேரம் இந்த சட்டம் எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது.

எந்த தொழிற்சாலை மற்றும் நிறுவனம் விரும்புகிறதோ அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களும் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். இந்த சட்டத்தால் தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் சூழல் உருவாகும் அல்லவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிச்சயம் அப்படி கிடையாது. ஒரு தொழிலாளரின் எதிர்ப்பை மீறி நிச்சயம் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. அதன் பிறகு வாரத்தில் மீதி இருக்கின்ற 3 நாட்கள் விடுமுறை என்பது சம்பளத்துடன் கூடிய விடுமுறை தான். இந்த நாட்களில் வேலைக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இப்போது இருக்கக்கூடிய சட்டங்களில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு வர சொன்னால் என்ன நடைமுறை பின்பற்ற படுகிறதோ அதுதான் பின்பற்றப்படும் என்று கூறியுள்ளனர்.