தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக மாற்றப்பட்டு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பாஜகவின் கிளை கழகமாக திமுக இயங்குகிறது என குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு 8 மணி நேரம் என்பதே அதிகபட்சம். இதில் 12 மணி நேரம் உழைக்க சொல்வதா.? இது தொழிலாளர்கள் நலச் சட்டம் அல்ல. நாசச் சட்டம். மற்ற மாநிலங்களில் இல்லாத போது தமிழகத்தில் முதலாவதாக ஏன் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதைப் பற்றி கேட்டால் பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். இந்த புதிய மசோதாவை சட்டமாக்க நாங்கள் விடமாட்டோம். கடுமையாக எதிர்ப்போம் என்று சீமான் கூறியுள்ளார்.