பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (மார்ச் 01) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அகற்றிவிட்டு, திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு அவர் அதிரடியாகப் பதிலளித்தார். ”திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் கூட்டணிகள் உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில், ஓ.பன்னீர்செல்வம் இப்போது திமுகவில் இணைந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் திமுகவில் இணைந்துவிட்டதால், இனி அதிமுக தொண்டர்கள் யாரும் அவர் பின்னால் செல்ல மாட்டார்கள். தொண்டர்கள் எப்போதும் கொள்கையில் உறுதியாக இருப்பார்கள்” என்று தமிழிசை காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்-ன் இந்தத் திடீர் முடிவு அதிமுக தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
